Press "Enter" to skip to content

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் போலந்து, ருமேனியா பயணம்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் நிலையில், அமெரிக்க துணை அதிபரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

வாஷிங்டன்:

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாளை எட்டியுள்ளது. ரஷியாவுக்கு எதிராக உலக நாடுகளை அணிதிரட்டி வருகிறது அமெரிக்கா.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அடுத்த வாரம் போலந்து, ருமேனியா ஆகிய 2 ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை அவர் இரு நாடுகளிலும் பயணம் மேற்கொள்வார்.

போலந்து, ருமேனியா நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பின்போது ரஷியாவின் நியாயமற்ற உக்ரைன் படையெடுப்புக்கு பதிலளிக்க நெருக்கமான ஒருங்கிணைப்பை அவர் முன்னெடுப்பார் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »