Press "Enter" to skip to content

கடலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்

கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தம் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். ‘‘கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பன் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தம் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’’ எனத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மேயர், துணை மேயர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. பல இடங்களை தி.மு.க. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியிருந்தது. ஆனால், திமு.க. போட்டி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றி பெற வைத்தனர். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »