Press "Enter" to skip to content

என்.எஸ்.இ. முறைகேடு வழக்கு – முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கைது

சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் மற்றும் முன்னாள் செயலாக்க அதிகாரியான ஆனந்த் சுப்பிரமணியத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 25-ம் தேதி சென்னையில் கைது செய்தனர்.

புதுடெல்லி:

என்.எஸ்.இ. என அழைக்கப்படும் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா விதிமுறை மீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவருக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன், சிஓஓ ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கும் தலா ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, சித்ரா ராமகிருஷ்ணா முன்பிணை கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் முன் வந்தது. மனுவை  விசாரித்த நீதிபதி, அவரது முன்பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா டெல்லியில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »