Press "Enter" to skip to content

5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை – யாருக்கு சாதகம்?

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது.

புதுடெல்லி:

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகள், பஞ்சாப்பில் 117 தொகுதிகள், உத்தரகாண்டில் 70 தொகுதிகள், மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகள் என மொத்தம் 690 எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்ய மக்கள் வாக்களித்துள்ளனர்.

பஞ்சாப்பில் 71.95 சதவீதம், உத்தரகாண்டில் 65.37 சதவீதம், கோவாவில் 79.61 சதவீதம், மணிப்பூரில் 88.06 சதவீதம்,  உத்தர பிரதேசத்திலும் கணிசமான அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் இன்று எண்ணப்படுகிறது.

மதியத்துக்குள் யார் ஆட்சியை பிடிப்பது என்ற விவரம் தெரிய வரும்.

இந்த தேர்தல் முடிவுகள் ஜூலையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மத்திய அரசு, மாநில கட்சிகளை விட அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »