Press "Enter" to skip to content

உத்தர பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக

கோரப்பூர் சட்டசபைத் தொகுதியில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முன்னிலையில் உள்ளார்

லக்னோ:

ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் ஆட்சியை பாஜக தக்க வைக்கிறது. 2வது இடத்தில் சமாஜ்வாடி கட்சி உள்ளது. 

காலை 11 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 262 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

சமாஜ்வாடி கட்சி 123 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பகுஜன் சமாஜ் 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பிரியங்கா காந்தி தலைமையில் உத்தர பிரதேச மாநில தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. காலை 11 மணி நிலவரப்படி அந்த கட்சி 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 

கோரக்பூர் தொகுதியில் போட்டியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முன்னிலை பெற்றுள்ளார். ஜஸ்வந்த் நகர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட சிவபால்சிங் யாதவ், பின் தங்கியுள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »