Press "Enter" to skip to content

வெளிநாடுகளில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

மத்திய- மாநில அரசுகள் இதுவரை நிரந்தர தீர்வு காணாத நிலையில் இப்பொழுது இந்தோனேசிய மற்றும் செஸ்செல்ஸ் அரசுகளால் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது, ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு மேலும் அச்சத்தை உண்டாக்குகிறது.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அந்தமான் பகுதியில் மீன்பிடித்து வந்த 5 குமரி மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக இந்தோனேசிய அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதே காரணங்களுக்காக அரபிக்கடலில் மீன்படித்து வந்த 32 தமிழக மீனவர்களும், செஸ்செல்ஸ் அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இலங்கைக்கடல் எல்லையில் இன்னல்களை சந்தித்து வரும் நம் மீனவர்கள் மத்தியில் இந்த செய்தி புதியதொரு இடியாக இறங்கி இருக்கிறது.

எந்த பிரச்சினைக்கும் மத்திய- மாநில அரசுகள் இதுவரை நிரந்தர தீர்வு காணாத நிலையில் இப்பொழுது இந்தோனேசிய மற்றும் செஸ்செல்ஸ் அரசுகளால் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது, ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு மேலும் அச்சத்தை உண்டாக்குகிறது. மீனவ குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்து அவர்கள் அச்சத்தை போக்கும் வண்ணம் அயல்நாட்டு சிறையில் அடைபட்டு இருக்கும் நம் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »