Press "Enter" to skip to content

ரஷிய சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தில் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார்

ரஷிய கூட்டமைப்புக்கு சொந்தமான சொத்துக்களை உக்ரைன் அரசு பறிமுதல் செய்யும் சட்டத்தை உக்ரைன் பாராளுமன்றம் மார்ச் 3 அன்று நிறைவேற்றியது.

கீவ்:

உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் 15 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் உக்ரைனும் ரஷிய தாக்குதலுக்கு ஈடுகொடுத்து வருகிறது.

ரஷியாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன்மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்ய சொத்துக்களைக் கைப்பற்றும் சட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டு உள்ளார் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »