Press "Enter" to skip to content

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது

உட்கட்சி தேர்தல் தொடங்குவதால் புதிய மாநில தலைவர்கள் தேர்வும் ஆகஸ்டு மாதத்துக்கு பிறகே இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

சென்னை:

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது.

ஏப்ரல் 16-ந்தேதியில் இருந்து மே மாதம் 31-ந்தேதிக்குள் வட்டார தலைவர்கள், பிரதேஸ் காங்கிரஸ் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் ஜூலை 20-ந்தேதிக்குள் மாவட்ட தலைவர்கள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.

ஜூலை 21-ந் தேதியில் இருந்து ஆகஸ்டு 20-ந் தேதிக்குள் மாநில பொதுக்குழு, செயற்குழு, மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும்.

மாநில தலைவர்களுக்கான தேர்தல் ஆகஸ்டு 21-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 20-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.

அகில இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினர்கள் தேர்தல் அக்டோபர் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்படும்.

இந்த தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு நவம்பர் மாதம் அகில இந்திய தலைவருக்கான தேர்தல் நடைபெறும்.

உட்கட்சி தேர்தல் தொடங்குவதால் புதிய மாநில தலைவர்கள் தேர்வும் ஆகஸ்டு மாதத்துக்கு பிறகே இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »