Press "Enter" to skip to content

குஜராத்தில் மோடி ‘ரோடுஷோ’- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோரும் பிரதமர் மோடியுடன் வாகனத்தில் சென்றனர்.

அகமதாபாத்:

5 மாநில சட்டசபைத் தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகியவற்றில் பா.ஜனதா வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்தி ஆம்ஆத்மி முதல் முறையாக ஆட்சியை பிடித்தது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார். 4 மாநில தேர்தலில் பா.ஜனதாவின் அபாரமான வெற்றிக்கு பிறகு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மோடி ரோடுஷோ நடத்தி பா.ஜனதாவின் வெற்றியை கொண்டாடினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் அவர் சென்றார். சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த தொண்டர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தனர். அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பா.ஜனதாவின் மாநில தலைமை அலுவலகம் வரை அவர் ரோடுஷோ நடத்தினார். இதற்கான தூரம் 10 கி.மீ. ஆகும்.

குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோரும் பிரதமர் மோடியுடன் வாகனத்தில் சென்றனர்.

இன்று பிற்பகலில் பஞ்சாயத்து அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திலும் மோடி பங்கேற்க உள்ளார். நாளையும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. 4 மாநில தேர்தல் வெற்றியை கொண்டும், குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டும் இந்த பிரமாண்ட ரோடுஷோ நடத்தப்பட்டு உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »