Press "Enter" to skip to content

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் பாதுகாப்பு எந்திரத்தில் எந்த சீர்திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை- பிரதமர் மோடி

ராஷ்ட்ரிய ரக்‌ஷா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில், மத்திய அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத், முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் ராஷ்ட்ரிய ரக்‌ஷா பல்கலைக்கழக கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் விழாவில், மத்திய அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத், முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். பின்னர் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-   

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் பாதுகாப்பு எந்திரத்தை சீர்திருத்த வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் எந்த சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ராஷ்ட்ரிய ரக்‌ஷா பல்கலை கட்டுவதற்கு பெரும் எதிர்ப்புகள் இருந்தன.

கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் வளர்ச்சியின் மூலம் நிறைய பங்களிக்க முடியும். நான் உங்களுக்கு இரண்டு நிகழ்வுகளைச் சொல்கிறேன். 60 ஆண்டுகளுக்கு முன்பு அகமதாபாத்தில் ஒரு மருந்தியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இது குஜராத்தை மருந்துத் துறையில் முன்னணியில் வைத்திருக்க வழிவகுத்தது.

இது இப்போது உலக வணிகத் தலைவர்களை வழங்கி வருகிறது. அதே வழியில் ராஷ்ட்ரிய ரக்‌ஷா பல்கலையின் பாதுகாப்புத் துறையில் தலைவர்களை உருவாக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

தொழில்நுட்பம் இப்போது பாதுகாப்பு கருவியில் ஒரு சாத்தியமான ஆயுதமாக மாறியுள்ளது. பாதுகாப்புப் படைகளில் இருப்பதற்கு வெறும் உடல் பயிற்சி மட்டும் போதாது. உடல் தகுதி இல்லாவிட்டாலும் சிறப்புத் திறனாளிகளும் பாதுகாப்புத் துறையில் பங்களிக்க முடியும்.

கொரோனா தொற்றுகளின்போது, ஊரடங்கின் போது பல காவல் துறையினர் சீருடையில் உணவு மற்றும் மருந்துகளை ஏழைகளுக்கு வழங்கியதை நாம் பார்த்திருக்கிறோம். காவல்துறையின் மனிதாபிமான முகத்தை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு ஆறுதல் கூறினார் முதல் மந்திரி கெஜ்ரிவால்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »