Press "Enter" to skip to content

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை சீனா உள்பட 38 நாடுகள் புறக்கணித்தன

உக்ரைன் மீது ரஷியா 30-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியா படையெடுப்பால் உக்ரைன் பேரழிவை சந்தித்துள்ளது. குடியிருப்புகள் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

25.3.2022

00.10: ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 140 நாடுகள் வாக்களித்தன.

தீர்மானத்துக்கு எதிராக ரஷியா, பெலாரஸ், சிரியா, வட கொரியா, எரித்ரியா ஆகிய 5 நாடுகள் வாக்களித்தன. சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 

இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் இந்த வரைவு தீர்மானத்தில் இல்லை என்பதால் இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »