Press "Enter" to skip to content

எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும்- அதிபர் புதின் அதிரடி

நட்பற்ற நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்ய ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மாஸ்கோ:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்கு நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. 

இதற்கிடையே, ரஷ்யா நட்பற்ற நாடுகளின் பட்டியலை அறிவித்தது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பிரிட்டன், ஜப்பான், கனடா, நார்வே, சிங்கப்பூர், தென்கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் உக்ரைன் ஆகியவை அடங்கும்.

ரஷிய எரிவாயு மீதான தடைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், பல ஐரோப்பிய நாடுகள் மக்கள் விரும்பத்தக்கதுகோவிலிருந்து உக்ரைன் வழியாக எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன. 

இந்நிலையில், எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என்ற அதிபர் புதினின் அறிவிப்பு, ஐரோப்பாவை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நட்பற்ற நாடுகளுக்கு எங்கள் எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை ரஷ்ய ரூபிள்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்த நான் முடிவு செய்துள்ளேன். இந்த மாற்றங்களை ஒரு வாரத்திற்குள் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

அரசாங்கமும் மத்திய வங்கியும் இந்த நடவடிக்கைகளை ரஷ்ய நாணயத்திற்கு எவ்வாறு நகர்த்துவது என்பது குறித்த ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு ஒரு வாரம் அவகாசம் இருப்பதாகவும், எரிவாயு ஒப்பந்தங்களில் தொடர்புடைய மாற்றங்களைச் செய்ய உத்தரவிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »