Press "Enter" to skip to content

கொரோனா பரவல் உயர்வு எதிரொலி – முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27ம் தேதி ஆலோசனை

இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,30,54,952 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15,079 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வரும் புதன்கிழமை முதல் மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »