Press "Enter" to skip to content

டைட்டானிக்  வசூலை முந்தியது ‘அவதார் 2’

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 16ல் வெளியான படம், ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’. சாம் வொர்த்திங்டன், ஜோ சல்டனா, ஸ்டீபன் லாங், கேத் வின்ஸ்லெட் உட்பட பலர் நடித்திருந்தனர். படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறது.

இப்போது, கேமரூனின் ‘டைட்டானிக்’ பட வசூலை முறியடித்து இந்தப் படம் சாதனைப் படைத்துள்ளது. உலக அளவில் ரூ.18,530 கோடி வசூலித்து ‘டைட்டானிக்’ படம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’ படம் ரூ.18,534 கோடிக்கு மேல் வசூலித்து ‘டைட்டானிக்’கை இப்போது முந்தி இருக்கிறது. இதனால், அந்தப் படம் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. உலக அளவில் அதிகம் வசூலித்த படங்களில் ‘அவதார்’ முதல் பாகம் ரூ.23,968 கோடியுடன் முதலிடத்திலும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ ரூ.22,319 கோடி வசூலுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »