Press "Enter" to skip to content

‘அதிருதா… நெஞ்சம் அதிரணும் மாமே…’ – டி.ராஜேந்தர் குரலில் ‘மார்க் ஆண்டனி’ பாடல் ப்ரோமோ

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் டி.ராஜேந்தர் பாடியுள்ள ‘அதிருதா… நெஞ்சம் அதிரணும் மாமே’ பாடல் ப்ரோமோ காணொளி வெளியாகியுள்ளது. இப்பாடல் வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, ‘பகீரா’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை சின்ன (மினி) ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அதிருதா… நெஞ்சம் அதிரணும் மாமே…’ பாடலின் ப்ரோமோ காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது.

காணொளியை பொறுத்தவரை ஃபுல் எனர்ஜியுடன் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் பாடலை பாடுகிறார். பாடலுக்கு முன்பாக அவரது ஸ்டைலில் ஒரு ரிதமை வாசித்து அதகளம் செய்கிறார். 1.36 நிமிடங்கள் ஓடும் இந்த காணொளி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »