Press "Enter" to skip to content

“சாதி மதத்தைக் கடந்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள்”: மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை

சென்னை: மாணவர்கள் சாதி மதத்தைக் கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் இன்று (ஜூலை 16) நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேருக்கு தலா ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் சூர்யா பேசியதாவது: சாதி மதத்தைக் கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். பிறரை பழி சொல்லுதல், பிறரைப் பற்றி எதிர்மறையாக பேசுவதை குறைக்க வேண்டும். வீண் சொல், பழி சொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்கக் கூடாது. கல்வி மூலமாக வாழ்க்கையைப் படியுங்கள். வாழ்க்கை மூலமாக கல்வியைப் படியுங்கள். வாழ்க்கை முழுவதும் கல்வி தேவை. மார்க் மட்டுமே கல்வி அல்ல. அகரம் மூலம் 5200 மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற 14 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் தமிழக அரசுடன் சேர்ந்து பயணிக்கும்போது கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சம் மாணவர்களுக்கு உதவ முடிந்திருக்கிறது.

இவ்வாறு சூர்யா கூறினார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »