Press "Enter" to skip to content

‘என் முகம் கொண்ட என் உயிரே’ – ‘ஜெயிலர்’ பட ‘ரத்தமாரே’ லிரிக்கல் காணொளி எப்படி?

சென்னை: ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ‘Rathamaarey’ லிரிக்கல் காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இதில் ரஜினியின் பேச்சு, அவர் சொன்ன குட்டிக் கதை ஆகியவை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பின. அண்மையில் வெளியான படத்தின் பட விளம்பரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் லிரிக்கல் காணொளிக்கள் வெளியான நிலையில் ‘ரத்தமாரே’ பாடல் காணொளி மட்டும் மிஸ்ஸிங். இந்நிலையில் தற்போது அந்த காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாடல் எப்படி? – விக்னேஷ் சிவன் எழுதியுள்ள பாடலை விஷால் மிஸ்ரா பாடியுள்ளார். தந்தை மகனுக்கும் இடையிலான பாசத்தை சொல்லும் பாடலாக மட்டுமல்லாமல், தாத்தா – பேரனுக்கும் இடையிலான அன்பையும் வெளிப்படுத்துகிறது. மெலடி பாடலான இப்பாடலின், ‘என் முகம் கொண்ட என் உயிரே’, ‘இவனையும் தாண்டி சிறந்தவனே’ போன்ற வரிகள் கவனம் பெறுகின்றன. பாடல் காணொளி;

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »