Press "Enter" to skip to content

இயக்குநரானார் அருவி மதன்

‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மதன். இந்தப் படத்துக்குப் பிறகு ‘அருவி மதன்’ என்றே அழைக்கப்படுகிறார். அடுத்து, ‘கர்ணன்’, ‘அயலி’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘பம்பர்’, ‘மாவீரன்’ எனத் தொடர்ந்து நடித்து வரும் அவர், ‘நூடுல்ஸ்’ படம் மூலம் இயக்குநராகி இருக்கிறார்.

ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் அருண்பிரகாஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஹரீஷ் உத்தமன் கதைநாயகனாக நடித்திருக்கிறார். ஷீலா ராஜ்குமார், ஆழியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா உட்பட பலர் நடித்துள்ளனர். ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலமாக இந்தப்படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார். செப்.1-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. படம் பற்றி அருவி மதன் கூறும்போது, “இரண்டே நிமிடங்களில் பரிமாறக் கூடிய உணவு ‘நூடுல்ஸ்’.

இப்படி 2 நிமிடங்களில் நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் பலருக்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த 2 நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால், நாயகி செய்த செயலால் ஒரு குடும்பமே காவல்துறை அதிகாரி ஒருவரிடம் வசமாக மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.

அதேபோல் கதை நெடுக தொடரும் இன்னும் சில இரண்டு நிமிட நிகழ்வுகளால் என்னென்ன திருப்பங்கள், எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன. இவர்கள் அந்தப் பிரச்சினையிலிருந்து எப்படித் தப்பிப்பார்கள் என்பதை மையப்படுத்தி திரைக்கதை உருவாகியுள்ளது” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »