Press "Enter" to skip to content

லாக் டவுன் நைட்ஸ் கரோனா கால கதை: இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி தகவல்

ஸ்ரீகாந்த் நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’, தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ‘மெர்க்குரி பூக்கள்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டேன்லி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘லாக் டவுன் நைட்ஸ்’.

வெற்றி நாயகனாக நடிக்கும் இதில், ஹம்ஷினி பெருமாள், கங்கை அமரன், மதியழகன், லோகன், கோமளா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 2எம் திரைப்படம் வினோத் சபரீஷ் இதை தயாரிக்கிறார்.

படம் பற்றி எஸ்.எஸ்.ஸ்டேன்லி கூறும்போது, “இது ஒரு ‘ஃபீல்குட்’ படம். கரோனா காலகட்டத்தில் நடக்கும் கதை. ஆனால், இப்போதுதான் படப்பிடிப்பு நடத்தினோம். இந்தோனேஷியாவில் இருந்து மலேசியா செல்லும் பார வண்டி டிரைவரான வெற்றி, கரோனா பொதுமுடக்கக் காலத்தில் என்ன செய்கிறார் என்பதுதான் கதை. கரோனா காலகட்டத்தை படப்பிடிப்புக்காக இப்போது கொண்டு வர கஷ்டப்பட்டோம். கங்கை அமரன் இந்தப் படத்தில் முழு நீள கேரக்டரில் வருகிறார். மொத்தப் படப்பிடிப்பையும் மலேசியாவில் நடத்தியுள்ளோம். இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »