Press "Enter" to skip to content

விடாமுயற்சி படப்பிடிப்பில் த்ரிஷா: மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படங்கள்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம், ‘விடாமுயற்சி’. இதில் த்ரிஷா, ரெஜினா நாயகிகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

படத்துக்காக அஜித், த்ரிஷா உட்பட படக்குழுவினர் அங்குச் சென்றுள்ளனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்கு இடையே அஜர்பைஜானில் உள்ள முக்கிய இடங்களுக்குச் சென்று நடிகை த்ரிஷா புகைப்படங்கள் எடுத்துள்ளார். அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் மிகுதியாக பகிரப்பட்டு ஆகி வருகின்றன.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »