Press "Enter" to skip to content

புதிய வடிவில் மேடையேறும் இமையம் கதைகள்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையத்தின் சிறுகதைகளை வைத்து ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கியுள்ள ‘இமையம் கதைகளோடு ஒரு மாலைப் பொழுது’ என்னும் மேடை நிகழ்ச்சி, வரும் 21-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை அரங்கில் நடைபெறுகிறது.

தமிழின் முக்கிய எழுத்தாளர்களின் கதைகளை வைத்து ‘கதைகள் பேசுவோம்’ என்னும்மேடை நிகழ்ச்சிகளை ப்ரஸன்னாராமஸ்வாமி அரங்கேற்றி வருகிறார்.தற்போது இமையம் எழுதிய’காதில் விழுந்த கதைகள்’, ‘அணையும் நெருப்பு’, ‘தாலி மேல சத்தியம்’, ‘மயானத்தில் பயமில்லை’ ஆகிய சிறுகதைகளைக் கொண்டு ‘கதைகள்பேசுவோம்’ என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து இயக்கியுள்ளார். சென்னை ஆர்ட் திரையரங்கம் நிறுவனம் இந்நிகழ்ச்சியை வழங்குகிறது. இதற்கு முன்பு தி.ஜானகிராமன், அசோகமித்திரன் கதைகளை வைத்து இதே போன்ற நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள இமையம் கதைகள் குறித்துப் பேசிய ப்ரஸன்னா ராமஸ்வாமி, “இவை,நாம் வாழும் சமூகத்தில், நாம் பார்த்தவற்றை அறியும்படி திரை திறக்கும் கதைகள், அறியாதவற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சும் கதைகள் ” என்கிறார்.

நிகிலா கேசவன், பிரசன்னா ராம்குமார், ஸ்ம்ருதி பரமேஷ்வர், நந்தகுமார், பிரேம், சிநேஹாசேஷ், அபர்ணா ராஜேஷ், கீதாஞ்சலி ஆகியகலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். ’இமையத்தின் கதைகளோடு ஒரு மாலைப்பொழுது’ நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டுகளை புக்மைஷோ இணையதளத்தில் (https://rb.gy/ldbg6) பெற்றுக்கொள்ளலாம். விவரங்கள் குறித்த வாட்சப் தொடர்புக்கு 9094038623.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »