Press "Enter" to skip to content

“சிங்கத்துக்கு சீக்கு வந்தா”… – கார்த்தியின் ஜப்பான் பட விளம்பரம் எப்படி?

சென்னை: ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’ படத்தின் பட விளம்பரம் வெளியாகியுள்ளது.

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், மலையாள நடிகர் சணல் அமன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் பட விளம்பரம் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவருகிறது.

கார்த்தியின் திரைப் பயணத்தில் ‘ஜப்பான்’25-வது படம் என்பதால் அதைக் கொண்டாடும் விதமாக ‘கார்த்தி 25’ என்கிற பெயரில் இந்த நிகழ்ச்சி நடந்துவருகிறது. இதனிடையே, தற்போது ஜப்பான் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: ராஜு முருகனின் வழக்கமான பாணியில் இல்லாத ஒருபடம் போல் ஜப்பான் ட்ரெய்லரின் காட்சிகள் தெரிகின்றன. 2.19 நிமிடம் ஓடும் ட்ரெய்லரில், கார்த்தியே முழுக்க வசனங்களாக பேசுகிறார். கார்த்தியின் ஸ்லாங்க் துருத்திக்கொண்டு தனியே தெரிகிறது. வேண்டுமென்றே திணித்த உணர்வைக்கொடுக்கிறது. திமிங்கலம், சுறா என வசனங்களில் புதுமையில்லை. விஜய் மில்டன், சுனில் ட்ரெய்லரில் கவனம் ஈர்க்கின்றனர்.

வழக்கமான திருடன் – காவல் துறை கதையாக இருக்கும் என்பதை பட விளம்பரம் உணர்த்துகிறது. இருப்பினும் ராஜூமுருகனின் அழுத்தமான திரைக்கதைக்கதையும், சொல்லப்படும் விதமும் படத்தின் மீதான சுவாரஸ்யத்தை கூட்டும் என தெரிகிறது.

[embedded content]

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »