Press "Enter" to skip to content

தாய்லாந்து செல்கிறது ’விஜய் 68’ படக்குழு

சென்னை: ‘லியோ’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது.

முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் பூஜை தொடர்பான காணொளி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், செல்வராகவன், அஜ்மல் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு பாங்காக்கில் நடக்க இருக்கிறது. அங்கு பிரம்மாண்ட சேஸிங் காட்சி ஒன்றைப் படமாக்க இருக்கின்றனர். இதற்காகப் படக்குழு நவ.1ம் தேதி அங்கு செல்கிறது. அதை முடித்துவிட்டு அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தென்னாப்பிரிக்காவில் நடத்த உள்ளனர்

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »