Press "Enter" to skip to content

‘விடுதலைக்கு வித்திடும் குருதி யுத்தம்’ – பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ விளம்பரம் எப்படி?

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் விளம்பரம் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. அதிக பொருட்செலவில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு இன்று (நவ.1) வெளியிட்டுள்ளது.

விளம்பரம் எப்படி?- ராஜநாகம் ஒன்றின் கழுத்தை லாவகமாக திருப்பி அதன் உடல்வேறு தலைவேறாக விக்ரம் பிரித்து எடுப்பதுடன் விளம்பரம் தொடங்குகிறது. புழுதி பறக்கும் வறண்ட நிலத்தின் பின்னணியில் ரத்தமும் யுத்தமும் கலந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை விளம்பரத்தில் காட்டப்படுகின்றன. கரிய நிறமும், ஜடா முடியும் கொண்ட தோற்றத்தில் விக்ரம் மிரட்டியுள்ளார். இதுவரை ஏற்காத ஒரு புதிய ‘கெட்அப்’பில் மாளவிகா மோகனன் தோன்றுகிறார். ‘விடுதலைக்கு வித்திடும் குருதி யுத்தம்’ என்று டீசருக்கு இடையே வரும் வாசகத்துக்கு ஏற்ப விளம்பரம் முழுக்க ரத்தம் தெறிக்கிறது. தனது படைப்புகளின் வழியே ஒடுக்கப்பட்டோரின் வழியை பேசிவரும் பா.ரஞ்சித் இதில் என்னவகையான அரசியலை கையிலெடுத்துள்ளார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ‘தங்கலான்’ விளம்பரம் காணொளி:

[embedded content]

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »