Press "Enter" to skip to content

மைக்கேல் தோல்விக்கு என்ன காரணம்?: சந்தீப் கிஷன் விளக்கம்

தமிழில், யாருடா மகேஷ்?, மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கேப்டன் மில்லர் படங்களில் நடித்திருப்பவர் சந்தீப் கிஷன். தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவர் நடித்து கடந்த வருடம் வெளியான படம், ‘மைக்கேல்’. இதில் விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி, அனுசுயா, திவ்யன்ஷா உட்பட பலர் நடித்தனர். தமிழ், தெலுங்கில் உருவான இந்த மெகா வரவு செலவுத் திட்டம் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தும் சரியான வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், அதன் தோல்விக்கு காரணம் என்ன என்று சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “மைக்கேல் படம் சரியாக ஓடவில்லை. எனக்கும் அந்தப் படத்தின் இறுதி வடிவம் பிடிக்கவில்லை. அதை இயக்குநரிடமே சொன்னேன். எடிட்டிங்கில் ஏதேனும் மேஜிக் நடந்திருந்தால் சிறந்த படமாக வந்திருக்கும். ஆரம்பத்தில் சில காட்சிகளைப் பார்த்தபோது நன்றாக இருந்தது. முழு படமாக அது ஏமாற்றிவிட்டது. அந்தப்படத்தை 3 பேர் தயாரித்தனர். 2 பேர் அது நன்றாக ஓடும் என்று நம்பினர். ஒருவர், ரிலீஸுக்கு 12 நாட்களுக்கு முன், படம் சரியாக இல்லை என்றார். வெளியீடு நாள் நெருங்கிவிட்டதால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனாலும் தொழில்நுட்ப ரீதியில் ‘மைக்கேல்’ சிறந்த படம். அதற்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கதைக்கு கொடுக்க தவறிவிட்டோம்” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »