Press "Enter" to skip to content

மலையாள திரைப்படத்தில் கால் பதிக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ்!

சென்னை: தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது மலையாள திரைப்படத்தில்ும் நடிகராக அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் வெளியான ‘ஜூன்’, ‘மதுரம்’ படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் அகமது கபீர். இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘கேரளா குற்றம் ஃபைல்ஸ்’ இணையத் தொடர் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அவர் அடுத்ததாக காதலை மையமாக கொண்டு புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் நாயகனாக அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். இதன்மூலம் அவர் மலையாளத்தில் அறிமுகமாகிறார். ‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நானா’ படங்களுக்கு இசையமைத்த ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

அர்ஜுன் தாஸை பொறுத்தவரை ‘கைதி’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர். தற்போது, தெலுங்கில் உருவாகிவரும் பவன் கல்யாணின் ‘ஓஜி’ படத்தில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘அநீதி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »