Press "Enter" to skip to content

BAFTA 2024-ல் 7 விருதுகளுடன் ‘ஒப்பன்ஹெய்மர்’ ஆதிக்கம் – முழு பட்டியல்

லண்டன்: பாஃப்டா 2024 விருது வழங்கும் நிகழ்வில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் 7 விருதுகளை குவித்துள்ளது.

பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாஃப்டா) அமைப்பு ஆண்டுதோறும் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பாஃப்டா 2024 விருது வழங்கும் நிகழ்வு லண்டன், சவுத்பேங்க் சென்டரில் உள்ள ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான ஹாலிவுட், பாலிவுட் மற்றும் பிரிட்டிஷ் நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் ஏழு விருதுகளுடன் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ’ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 5 விருதுகளை வென்று ‘புவர் திங்ஸ்’ திரைப்படம் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது. வெற்றி பெற்றவர்களின் முழுமையான பட்டியல்:

  • சிறந்த திரைப்படம்: ஒப்பன்ஹெய்மர்
  • சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம்: புவர் திங்ஸ்
  • ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படம்: தி ஸோன் ஆஃப் இன்டரெஸ்ட்
  • சிறந்த ஆவணப்படம்: 20நாட்கள் இன் மரியுபோல்
  • சிறந்த அனிமேஷன் படம்: தி பாய் அண்ட் தி ஹெரோன்
  • சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)
  • சிறந்த அசல் திரைக்கதை: அனாடமி ஆஃப் எ ஃபால்
  • சிறந்த தழுவல் திரைக்கதை: அமெரிக்கன் ஃபிக்‌ஷன்
  • சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
  • சிறந்த நடிகர்: சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)
  • சிறந்த உறுதுணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
  • சிறந்த உறுதுணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)

சிறந்த அறிமுக எழுத்தாளர் / இயக்குநர் / தயாரிப்பாளர்: எர்த் மாமா படத்துக்காக சவானா லீஃப் (இயக்குநர்), ஷிர்லி ஓ’கானர் (தயாரிப்பாளர்), மெட் ரியோர்டன் (தயாரிப்பாளர்)

  • சிறந்த நடிகர்கள் தேர்வு (காஸ்டிங்): தி ஹோல்டோவர்ஸ்
  • சிறந்த ஒளிப்பதிவு: ஒப்பன்ஹெய்மர்
  • சிறந்த எடிட்டிங்: ஒப்பன்ஹெய்மர்
  • சிறந்த ஆடை அலங்காரம்: புவர் திங்ஸ்
  • சிறந்த சிகை அலங்காரம் & ஒப்பனை: புவர் திங்ஸ்
  • சிறந்த பின்னணி இசை: ஒப்பன்ஹெய்மர்
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: புவர் திங்ஸ்
  • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: புவர் திங்ஸ்
  • சிறந்த பிரிட்டிஷ் அனிமேஷன் குறும்படம்: கிராப் டே
  • சிறந்த பிரிட்டிஷ் குறும்படம்: ஜெல்லிஃபிஷ் அண்ட் லாப்ஸ்டர்

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »