Press "Enter" to skip to content

சென்னையில் பன்னாட்டு ஆவணப்பட விழா

Last Updated : 20 Feb, 2024 05:43 AM

Published : 20 Feb 2024 05:43 AM
Last Updated : 20 Feb 2024 05:43 AM

சென்னை: சென்னையில் 12- வது பன்னாட்டு ஆவண மற்றும் குறும்படவிழா இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவண மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. பல்வேறு நாடுகளில் இருந்து ஆவணப்படங்கள் கலந்துகொள்கின்றன. இதில் போட்டியும் அறிவிக்கப் பட்டுள்ளது. வெற்றி பெறும் நான்கு ஆவணப் படங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து 20 இயக்குநர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.

சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ், பெரியார் திடல், தரமணி ரோஜா முத்தையா நூலகம், சாலிகிராமம் பிரசாத் லேப் உட்பட 13 இடங்களில் இந்தப் படங்கள் திரையிடப்படுகின்றன. அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »