Press "Enter" to skip to content

இந்திப் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்: நடிகர் நசீருதீன் ஷா அதிருப்தி

இந்தி படங்களில் விஷயமே இல்லை என்பதால் இந்திப் படங்கள் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன் என்று பிரபல நடிகர் நசீருதீன் ஷா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தி திரைப்படம் நூறு வருட பழமை வாய்ந்தது என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறோம். ஆனால், நூறு வருடங்களாக ஒரே மாதிரியான படங்களைத்தான் தயாரித்து வருகிறோம் என்பது ஏமாற்றத்தைத் தருகிறது. அதனால் இந்திப் படங்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். அதில் ஒரு விஷயமும் இல்லை. இந்திய உணவுகளில் சுவை இருப்பதால் உலகின் பல பகுதிகளில் அது விரும்பப்படுகிறது. இந்திப் படங்களில் என்ன இருக்கிறது? உலகின் பல பகுதிகளில் வாழும் இந்தியர்கள் அதை விரும்பிப் பார்க்கச் செல்கிறார்கள். அது அவர்கள் வேரோடு தொடர்புடையது. ஆனால் அவர்களுக்கும் இதுபோன்ற படங்கள் விரைவில் அலுத்து விடும்.

பணம் சம்பாதிப்பதற்கான வழியாக மட்டுமே திரைப்படத்தை பார்ப்பதை நிறுத்தினால்தான் இங்கு சிறந்த படங்கள் உருவாகும். தீவிரமான திரைப்படங்களை உருவாக்குபவர்களுக்கு இன்றைய யதார்த்தத்தைக் காட்ட வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு எதிராக யாரும் ஃபத்வா கொண்டுவராத வகையிலும் அமலாக்கத்துறை அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டாத வகையிலும் அவர்கள் அதுபோன்ற படங்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு நசீருதீன் ஷா தெரிவித்துள்ளார்

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »