Press "Enter" to skip to content

முதல்தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து தமிம் இக்பால் சாதனை

முதல்தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்ததுடன், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த வங்காளதேச வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் தமிம் இக்பால்.

வங்காளதேச அணியின் இடது கை தொடக்க பேட்ஸ்மேன் தமிம் இக்பால். இவர் வங்காளதேசம் கிரிக்கெட் லீக்கில் முச்சதம் அடித்தார். அதோடு 334 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் முதல்தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வங்காளதேசம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முச்சதம் அடித்தது குறித்து தமிம் இக்பால் கூறுகையில் ‘‘ஆடுகளம் விளையாடுவதற்கு சிறப்பாக இருந்தது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமானதாக இல்லை. இதனால் என்னால் எளிதாக ரன்கள் குவிக்க முடிந்தது. ஒட்டுமொத்த இன்னிங்ஸ் முடியும் வரை நான் சாதனைப் படைப்பேன் என்று நினைக்கவில்லை. எனது பேட்டிங்கில் கவனம் செலுத்தி கிரிக்கெட் ஷாட்டுகளை விளையாடினேன். சிக்சர்கள் அடிப்பதை விட பவுண்டரிகளைத்தான் எதிர்பார்த்தேன்.

260-270 ரன்கள் அடிக்கும்வரை முச்சதம் பற்றி யோசிக்கவில்லை. 280 ரன்னைத் தொட்டபோது, முச்சதம் குறித்து யோசித்தேன். முச்சதம் குறித்து அதிகமான யோசித்திருந்தால், நான் ஆட்டமிழந்திருப்பேன். ஒவ்வொருவருக்கும் முச்சதம் அடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். இந்த போட்டியில் நான் முச்சதம் அடிப்பேன் என்று நினைக்கவில்லை’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »