Press "Enter" to skip to content

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் சோதனை தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகல்

தசை பிடிப்பு முழுமையாக குணமடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.

நியூசிலாந்து – இந்தியா இடையிலான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா பேட்டிங் செய்யும் போது தசை பிடிப்பால் அவதிப்பட்டார். இதனால் 60 ரன்கள் எடுத்திருந்தபோது மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

அதன்பின் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் பகுதிநேர கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் அணியை சிறப்பாக வழிநடத்திச் சென்றார். போட்டிக்குப்பின் பேட்டியளித்த கேஎல் ராகுல் ‘‘ஒன்றிரண்டு நாட்களுக்குள் ரோகித் சர்மா குணமாகிவிடுவார்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தசை பிடிப்பு முழுமையாக குணமடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.

நியூசிலாந்து – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (பிப்ரவரி) 5-ந்தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது. 2-வது போட்டி ஆக்லாந்தில் 8-ந்தேதியும், 3-வது போட்டி மவுண்ட் மவுங்கானுயில் 11-ந்தேதியும் நடக்கிறது.

அதன்பின் முதல் டெஸ்ட் வெலிங்டனில் 21-ந்தேதியும், 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் 29-ந்தேதியும் தொடங்குகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »