Press "Enter" to skip to content

ஏன் இந்த அவசரம்?: ஆர்சிபி-ஐ கிண்டல் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் 2020 சீசனுக்கான போட்டி அட்டவணையை டுவிட்டரில் வெளியிட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கிண்டல் செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஐபிஎல் 2020 சீசன் அடுத்த மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நேற்று ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியானதாக செய்திகள் உலா வந்தன. பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் போட்டிகளுக்கான தேதி வெளியானது. ஆர்சிபி அணி பெங்களூருவில் நடைபெறும் ஏழு போட்டிகளின் தேதியை வெளியிட்டிருந்தது. அத்துடன் ஒவ்வொரு அணிகளுடன் மோதும் தேதி, நேரத்தையும் டுவிட்டரில் வெளியிட்டிருந்தது.

இதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஏன் இந்த அவசரம்? என்று கேட்பதுபோல் பதில் அளித்துள்ளது. ஆர்சிபி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சின்னசாமி, நாங்கள் இங்கே வருகிறோம். காலண்டரில் தேதிகளை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தது.

அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ‘‘நாங்கள் பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம். ஆனால் சில அணிகள் முன்னதாகவே வெளியிட்டுள்ளன. இது எங்களுடைய லோகோ…’’ என பதிவிட்டுள்ளது.

We will wait for @BCCI‘s official announcement on the fixtures, but for any franchises releasing early, this is our logo. 👀 https://t.co/haShMYzBHSpic.twitter.com/KSRDaha24X

— Rajasthan Royals (@rajasthanroyals)

February 15, 2020

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »