Press "Enter" to skip to content

இங்கிலாந்து அணிக்கு திரும்ப அலெக்ஸ் ஹேல்ஸ் காத்திருந்தே ஆக வேண்டும்: மோர்கன் சொல்கிறார்

தொடக்க பேட்ஸ்மேன் ஆன அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்து அணிக்கு திரும்ப வேண்டுமென்றால் காத்திருந்தே ஆக வேண்டும் என மோர்கன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடியவர் அலெக்ஸ் ஹேல்ஸ். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பைக்கான உத்தேச அணியில் இடம் பிடித்திருந்தார். அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டதாக புகார் எழுந்தது. இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதில் இருந்து தற்போது வரை இங்கிலாந்து அணியில் இடம் பிடிக்காமல் உள்ளார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஷ் டி20 லீக்கில் 576 ரன்கள் குவித்தார். சூப்பர் பார்மில் இருக்கும் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸ் காத்திருந்தே ஆக வேண்டும் என மோர்கன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘அணிக்கும் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கும் இடையிலான நம்பகத்தன்மை உடைந்துவிட்டது. அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது, அவருடைய ஆட்டத்திறன் மோசமாக இருக்கவில்லை. அவர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர்.

அதில் இருந்து நகர்ந்து, அணியுடன் நம்பகத்தன்மையை உருவாக்குவது அவசியமானது. அதற்கு போதுமான நேரம் தேவையானது’’ என்றார்.

இதனால் டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அவர் இடம் பிடிப்பாரா? என்பது சந்தேகம்தான்…

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »