Press "Enter" to skip to content

ரஞ்சி டிராபி இறுதி போட்டி: சவுராஷ்டிரா முதல் பந்துவீச்சு சுற்றில் 425 ஓட்டங்கள் குவிப்பு

பெங்காலுக்கு எதிரான ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் வசவாதா சதமும், புஜாரா உள்பட மூன்று பேர் அரைசதமும் அடிக்க சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 425 ரன்கள் குவித்தது.

ரஞ்சி கோப்பை இறுதி போட்டி ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. பெங்கால் அணிக்கெதிராக டாஸ் வென்ற சவுராஷ்டிரா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தேசாய், விக்கெட் கீப்பர் பேரோட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தேசாய் 38 ரன்னிலும், பேரோட் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வி.எம். ஜடேஜா 54 ரன்னில் வெளியேறினார்.

6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வசவாதா மற்றும் புஜாரா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய வசவாதா சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் அரையிறுதியில் குஜராத் அணிக்கெதிராக சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புஜாரா 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது.

சவுராஷ்டிரா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 384 ரன்கள் குவித்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய குஜராத் 425 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் தீப் நான்கு விக்கெட்டும், சர்பாஸ் அகமது 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »