Press "Enter" to skip to content

பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல், இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டிகள்?

கட்டாயமாக போட்டியை நடத்த வேண்டியிருந்தால் ரசிகர்கள் யாரும் இன்றி மூடிய மைதானத்திற்குள் போட்டியை நடத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 70-க்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது சுற்றுலா விசாக்களை ரத்து செய்துள்ளது.

குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுதியுள்ளது. கிரிக்கெட் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவதால் ஒருவேளை தொற்று ஏற்பட்டால் விபரீதம் ஆகிவிடும் என்பதால் ஐபிஎல் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கட்டாயம் போட்டியை நடத்த வேண்டுமென்றால் ரசிகர்கள் யாருமின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ‘‘எந்தவொரு போட்டியாக இருந்தாலும் பொதுமக்கள் கூடக்கூடாது என்ற சுகாதாரம் மற்றும் குடும்பம் நலத்துறை அமைச்சர் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள் கடைபிடிக்க வேண்டும். ஒருவேளை போட்டியை ரத்து செய்ய முடியாது என்றால், பார்வையாளர்கள் உள்பட யாரையும் அனுமதிக்கக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளது.

இதனால் ஐபிஎல் போட்டிகள் மற்றும் இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டிகள் நடத்தப்பட்டால் ரசிகர்கள் யாருமின்றி வெறிச்சோடிய மைதானத்தில் போட்டிகள் நடைபெறும்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »