Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் முடிந்த பிறகு 2 அணிகளை களம் இறக்க கிரிக்கெட் வாரியம் தயார்

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு 2 அணிகளை தயார் செய்ய இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் திட்டமிட்டுள்ளன.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரும் நடைபெறவில்லை.

இதன் காரணமாக ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் சங்கத்துக்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை எப்படி ஈடு செய்வது என்பது குறித்து, அவைகள் ஆலோசனை செய்து வருகின்றன. இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு 2 அணிகளை தயார் செய்ய இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் திட்டமிட்டுள்ளன.

அதாவது டெஸ்ட் போட்டிக்கு ஒரு அணியும், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவருக்கு இன்னொரு அணியையும் தயார் செய்வது என்று முடிவு செய்துள்ளன. இதன்மூலம் தொடர்ந்து போட்டிகளை நடத்தி வருவாயை பெற்று விடலாம் என்று கருதி இந்த முடிவை எடுத்துள்ளன.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போலவே இந்திய கிரிக்கெட் வாரியமும், 2 அணிகளை களமிறக்க தயாராகியுள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

2 அணிகளை களமிறக்க ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஏற்கனவே முடிவு எடுத்துள்ளன. தேவைப்பட்டால் இந்திய கிரிக்கெட் வாரியமும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு 2 அணிகளை களத்தில் இறக்க தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »