Press "Enter" to skip to content

ஆகஸ்ட் – செப்டம்பரில் நடைபெற இருந்த வங்காளதேசம்- நியூசிலாந்து சோதனை தொடர் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆகஸ்ட் – செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த வங்காளதேசம் – நியூசிலாந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதம்  நடைபெற இருந்தது.

மார்ச் மாதம் தொடக்கத்தில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நான்கு மாத காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இதுவரை இந்தத்தொடர் ஒத்திவைக்கப்படாமல் இருந்தது.

ஆனால் தற்போதுதான் இந்தியா, வங்காளதேசத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும், வங்காளதேச கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தொடரை ஒத்திவைப்பதாக இருநாட்டு கிரிக்கெட் போர்டின் ஆட்சிமன்றக் குழுக்களும் முடிவு செய்துள்ளன.

‘‘தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் சூழ்நிலையில் ஆகஸ்ட் மாதம் முழு கிரிக்கெட் தொடரையும் நடத்துவது மிகவும் சவாலானது’’ என்று வங்காளதேசம் தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »