Press "Enter" to skip to content

காயம் காரணமாக ஐதராபாத் வீரர் மிட்செல் மார்ஷ் விலகல்: ஜேசன் ஹோல்டர் சேர்ப்பு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் மிட்செல் மார்ஷ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. ஐதராபாத் அணியில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் இடம்பிடித்திருந்தார்.

இவர் பந்து வீசும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன்காரணமாக ஓவரை முழுமையாக முடிக்க முடியாமல் வெளியேறினார். இந்நிலையில் காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சுடன் மிடில் வாங்குதல் வரிசையை பலப்படுத்துவார் என்று நினைத்திருந்த ஐதராபாத் அணிக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்.

அவருக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டரை ஐதராபாத் அணியில் இணைக்க உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »