Press "Enter" to skip to content

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்

பிரித்வி ஷா அரைசதம் அடிக்க, ரிஷப் பண்ட் 37 ஓட்டங்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை பந்து வீச்சை தேர்வு செய்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த சுற்றில் இரண்டு பவுண்டரியுடன் டெல்லி 9 ஓட்டங்கள் அடித்தது.

2-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த சுற்றில் 2 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது.

3-வது ஓவரை ஹசில்வுட் வீசினார். இந்த சுற்றில் 4 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது. 

4-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த சுற்றில் இரண்டு பவுண்டரிகள் 12 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். 

5-வது ஓவரை ஹசில்வுட் வீசினார். இதில் 3 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

பளர் பிளேயின் கடைசி ஓவரான 6-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த சுற்றில் 6 ஓட்டங்கள் அடித்தது டெல்லி. இதனால் பவர் பிளேயில் டெல்லி அணி மட்டையிலக்கு இழப்பின்றி 36 ஓட்டங்கள் சேர்த்தது.

7-வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். இந்த சுற்றில் பிரித்வி ஷா இரண்டு பவுண்டரி விரட்டினார். ஜடேஜா வீசிய 8-வது சுற்றில் தவான் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரி அடித்தார்.  இந்த இரண்டு சுற்றில் டெல்லி அணிக்கு 26 ஓட்டங்கள் கிடைத்தது.

9-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரிலும் பிரித்வி ஷா இரண்டு பவுண்டரி விளாசினார்.

10-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஒரு ஓட்டத்தை அடித்து 35 பந்தில் அரைசதம் அடித்தார் பிரித்வி ஷா. டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவர் முடிவில் மட்டையிலக்கு இழப்பின்றி 88 ஓட்டங்கள் அடித்தது.

11-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆனார். இந்த சுற்றில் டெல்லி 6 ஓட்டங்கள் அடித்தது.

12-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த சுற்றில் ஒரு பவுண்டரியுடன் 8 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.

13-வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பிரித்வி ஷா ஸ்டம்பிங் ஆனார். அவர் 43 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார்.

டெல்லி அணி 14-வது சுற்றில் 8 ரன்களும், 15-வது சுற்றில் 11 ரன்களும், 16-வது சுற்றில் 10 ரன்களும் அடித்தனர்.

ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் டெத் ஓவரிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்னை அணி பந்து வீச்சாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

17-வது சுற்றில் 12 ரன்களும், 18-வது சுற்றில் 11 ரன்களும், 19-வது சுற்றில் 4 ரன்களும், கடைசி சுற்றில் 14 ரன்களும் என 41 ஓட்டங்கள் அடித்ததால் 20 சுற்றுகள் முடிவில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »