Press "Enter" to skip to content

224 ஓட்டத்தை என்ற இமாலய இலக்கை ராஜஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஜோடி ருத்ர தாண்டவம் ஆட கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 சுற்றில் 2 மட்டையிலக்கு இழப்பின்றி 223 ஓட்டங்கள் குவித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில மட்டையாட்டம் செய்தது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக மயங்க் அகர்வால் பட்டைய கிளப்பினார்.

இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 4.3 சுற்றில் 50 ஓட்டத்தில்க் கடந்த பஞ்சாப், 8.4 சுற்றில் 100 ஓட்டத்தில்க் கடந்தது. இதற்கிடையில் மயங்க் அகர்வால் 26 பந்தில் அரைசதம் கடந்தார்.

10 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மட்டையிலக்கு இழப்பின்றி 110 ஓட்டங்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 69 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ஓட்டங்கள் எடுத்திருந்தனர்.

அரைசதம் அடித்த பின் மயங்க் அகர்வால் ருத்ர தாண்டவம் ஆடினார். 13.2 சுற்றில் பஞ்சாப் அணி 150 ஓட்டத்தில்க் கடந்தது. இதற்கிடையில் கேஎல் ராகுல் 35 பந்தில் அரைசதம் அடித்தார்.

மறுமுனையில் ஜெட் வேகத்தில் சென்ற மயங்க் அகர்வால் 15-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 45 பந்தில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் அடித்தார். கடந்த போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்த நிலையில், இந்த போட்டியில் மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார்.

17-வது ஓவரின் 3-வது பந்தில் மயங்க் அகர்வால் 50 பந்தில் 106 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த சுற்றில் கேஎல் ராகுல் 54 பந்தில் 69 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பஞ்சாப் அணி 18 சுற்றில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 69 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

கடைசி 2 சுற்றில் மேக்ஸ்வெல், பூரன் ஜோடி 29 ஓட்டங்கள் விளாச கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 2  மட்டையிலக்கு இழப்பிற்கு 223 ஓட்டங்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 9 பந்தில் 13 ரன்களும், பூரன் 8 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »