Press "Enter" to skip to content

இப்படி ஒரு பவுண்டரி லைன் பீல்டிங்கை பார்த்திருக்க முடியுமா?: பூரனுக்கு குவியும் பாராட்டு

சஞ்சு சாம்சன் அடித்த பந்தை பவுண்டரி லைன் அருகில் நின்ற நிக்கோலஸ் பூரன் பந்தை பிடித்த விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 9-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. முதலில் மட்டையாட்டம் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 223 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 224 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது, ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஜோஸ் பட்லர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து ஸ்மித் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

8-வது ஓவரை முருகன் அஸ்வின் வீசினார். 3-வது பந்தை சஞ்சு சாம்சன் லெக் சைடு தூக்கி அடித்தார். பந்து பவுண்டரி லைனை தாண்டவும் மின்னல் வேகத்தில் நிக்கோலஸ் பூரன் லைனுக்கு வெளியில் பாய்ந்து பந்தை பிடித்தார்.

லைனுக்கு வெளியே சென்றது தெரிந்ததால் தரையில் விழுவதற்குள் பந்தை பவுண்டரி லைனுக்கள் வீசினார். அப்போது அவரது உடல் முழுவதும் பவுண்டரி லைனுக்கு வெளியில் இருந்தது.

அபாரமாக பீல்டிங் செய்து இரண்டு ரன்களை சேமித்தார். அவரது பீல்டிங்கை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ‘‘என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்ததில் மிகவும் சிறந்த சேமிப்பு. நம்ப முடியாதது’’ என புகழ்ந்துள்ளார்.

கிரிக்கெட் விமர்சகர்களும் புகழந்து வருகின்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »