Press "Enter" to skip to content

ஐபிஎல் உலகின் சிறந்த லீக்: பஞ்சாப் – ராஜஸ்தான் போட்டிக்குப் பிறகு கங்குலி பெருமிதம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 224 என்ற மிகப்பெரிய இலக்கை சேஸிங் செய்து சாதனைப்படைத்தது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 223 ஓட்டங்கள் குவித்தது. 2-வது போட்டிங் செய்த ராஜஸ்தான் 3 பந்து மீதமுள்ள நிலையில் இலக்கை எட்டி சாதனைப்படைத்தது.

போட்டி ஒரு பக்கமாகவே இருந்தது என்று கூற இயலாது. பீல்டிங், மட்டையாட்டம் என இரண்டு அணிகளும் அசத்தின. டெவாட்டியா 6 பந்தில் ஐந்து சிக்ஸ் விளாசியது. பூரனின் அபார பீல்டிங், இளம் சுழற்பந்து வீச்சாளர் பிஷ்னோயின் அசத்தல் பந்து வீச்சு என பல காரணங்கள் மூலம் ஐபிஎல்-லில் இந்த போட்டி தலைசிறந்தது எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல்-ஐ உலகத்தின் சிறந்த லீக்காக இந்த ஆட்டம் உருவாக்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘What a game…. இதுனால்தான் ஐபிஎல் லீக் உலகின் தலைசிறந்த தொடராக இருக்கிறது. அமேசிங் திறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »