Press "Enter" to skip to content

பிஞ்ச், படிக்கல், டி வில்லியர்ஸ் அரைசதம்: மும்பைக்கு 202 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி

ஆரோன் பிஞ்ச் 35 பந்தில் 52 ரன்களும், தேவ்தத் 40 பந்தில் 54 ரன்களும், டி வில்லியர்ஸ் 24 பந்தில் 55 ரன்களும் விளாசினர்.

ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் –  மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரோன் பிஞ்ச் – தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தேவ்தத் படிக்கல் நிதானமாக விளையாட, ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பவர் பிளே-யான முதல் ஆறு சுற்றில் ஆர்சிபி மட்டையிலக்கு இழப்பின்றி 59 ஓட்டங்கள் விளாசியது.

8-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆரோன் பிஞ்ச் 31 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 9-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 35 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 52 ஓட்டங்கள் அடித்தார்.

அப்போது ஆர்சிபி 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 81 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். விராட் கோலி பந்தை எதிர்கொள்ள மிகவும் திணறினார். அவர் 11 பந்தில் 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார்.

தேவ்தத் படிக்கல் – விராட் கோலி ஜோடி 20 பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. மேலும் 11 ரன்களே அடித்தது. அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். அதன்பின் படிக்கல் ஆட்டத்தில் வேகம் பிடித்தது.

பேட்டின்சன் வீசிய 14-வது சுற்றில் இரண்டு சிக்சர் விளாசினார் படிக்கல். 17-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி படிக்கல் 38 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், 40 பந்தில் 54 ஓட்டங்கள் எடுத்து போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுபக்கம் டி வில்லியர்ஸ் அவ்வப்போது வாணவேடிக்கை நிகழ்த்தினார். இதனால் 19-வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு விரட்டி 23 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் கடந்தார்.

கடைசி சுற்றில் ஷவம் டுபே இரண்டு சிக்ஸ் விளாசி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 201 ஓட்டங்கள் குவித்தது. டி வில்லியர்ஸ் 24 பந்தில் 55 ரன்களுடனும், ஷிவம் டுபே 10 சுற்றில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »