Press "Enter" to skip to content

20 சுற்றிப் போட்டியில் விராட் கோலி புதிய சாதனை

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி 43 ஓட்டங்கள் எடுத்தார்.

10 ஓட்டத்தில் எடுத்தபோது அவர் 20 சுற்றிப் போட்டியில் 9 ஆயிரம் ஓட்டத்தில் தொட்டு புதிய சாதனை படைத்தார். 286 போட்டியில் விளையாடி அவர் இந்த ஓட்டத்தில் எடுத்துள்ளார்.

20 சுற்றிப் போட்டிகளில் 9 ஆயிரம் ஓட்டத்தில் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட்கோலி படைத்தார். சர்வதேச அளவில் 7-வது வீரர் ஆவார். வி1ராட்கோலி 286 ஆட்டத்தில் 9 ஆயிரத்து 33 ஓட்டத்தை எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் அவர் 5,524 ஓட்டத்தை எடுத்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். சமீபத்தில் ரோகித்சர்மா 5 ஆயிரம் ஓட்டத்தில் எடுத்து ஐ.பி.எல்.லில் 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஒட்டுமொத்த 20 சுற்றிப் போட்டிகளில் 9 ஆயிரம் எடுத்த வீரர்கள் வருமாறு:-

1. கிறிஸ்கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)-13,296 ரன்

2. போல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்)- 10,370 ரன்

3. சோயிப் மாலிக் (பாகிஸ்தான்)- 9926 ரன்

4. மெக்குல்லம் (நியூசி லாந்து)- 9922 ரன்

5. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)- 9451 ரன்

6. ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா)- 9646 ரன்

7. வீராட்கோலி (இந்தியா) – 9033 ரன்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »