Press "Enter" to skip to content

6 பேட்ஸ்மேன்களுடன் விளையாடியதால் தோல்வி- லோகேஷ் ராகுல் சொல்கிறார்

நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் 6 பேட்ஸ்மேன்களுடன் விளையாடியதால் தோல்வி அடைந்தோம் என்று பஞ்சாய் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியுள்ளார்.

துபாய்:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத்திடம் 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 மட்டையிலக்கு இழப்புக்கு 201 ஓட்டத்தை எடுத்தது. தொடக்க வீரர்களான பேர்ஸ்டோவ் 97 ரன்னும் (55 பந்து 7 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் டேவிட் வார்னர் 52 ஓட்டத்தை எடுத்தார்.

பஞ்சாப் தரப்பில் ரவி பிஷ்னோய் 3 மட்டையிலக்குடும், அர்ஷ்தீப் சிங் 2 மட்டையிலக்குடும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய பஞ்சாப் அணிக்கு சீரான இடைவெளியில் மட்டையிலக்குடுகள் விழுந்தன. நிக்கோலஸ் பூரன் கடுமையாக போராடினார். அவர் 37 பந்தில் 77 ஓட்டத்தை எடுத்து அவுட் ஆனார். பஞ்சாப் அணி 16.5 சுற்றில் 132 ரன்னுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது.

ஐதராபாத் தரப்பில் ரஷித்கான் 3 மட்டையிலக்குடும், நடராஜன், கலீல் அகமது தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர்.

6 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 5-வது தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஐதராபாத் 3-வது வெற்றியை (6 ஆட்டம்) பெற்றது. தோல்வி குறித்து பஞ்சாய் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

பவர் பிளேவில் மட்டையிலக்குடுகளை இழக்கும் போது அது கடினமாக இருக்கும். குறிப்பாக நாங்கள் 6 பேட்ஸ்மேன்களை மட்டுமே கொண்டு விளையாடியது, மயங்கா அகர்வால் ஓட்டத்தை அவுட் ஆனது பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

நாங்கள் காற்றில் அடித்த அனைத்து பந்துகளும் பீல்டர்களிடமே சென்றது. கடந்த 5 ஆட்டங்களில் இறுதிக்கட்ட பந்துவீச்சில் நாங்கள் திணறினோம். ஆனால் இன்று அதில் முன்னேற்றம் கண்டு இருக்கிறோம்.

நிக்கோலஸ் பூரன் நன்றாக மட்டையாட்டம் செய்தார். கடந்த ஆண்டு அவருக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரவி பிஸ்னோய் அபாரமாக பந்து வீசினார். பவர் பிளேவோ அல்லது இறுதி கட்டத்திலோ அவர் பந்து வீச பயப்பட வில்லை.

அவர் ஆட்டத்தை அனுபவித்து விளையாடுகிறார். எங்களது அனைத்து வீரர்களும் திறமையானவர்கள். சில நாட்கள் அது நடக்காமல் போய்விடும். அவர்களுடன் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பிரசினைகளை புரிந்து கொள்வார்கள்.

ஒரு கேப்டனாக அவர்களின் தோல்வியை கைவிட்டு ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறும்போது, இந்த ஆட்டத்தை அனுபவித்து விளையாடினேன். ஆனால் நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தால் சிறிது பதட்ட மடைந்தேன்.

ரஷித்கான் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். அவரை அணியில் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நானும், பேர்ஸ்டோவும் (இங்கிலாந்து) இணைந்து விளையாடுவதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்.

இரு நாடுகளுக்கும் (ஆஸ்திரேலியா-இங்கிலாந்து) இடையே இவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்று ஏன் நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

அடுத்து ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் கடினமாக இருக்கும். இதிலும் 200 ஓட்டத்தை அடிப்போம் என்று நம்புகிறோம் என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »