Press "Enter" to skip to content

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பவுலர் 156.2 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்ட்ஜே நேற்று நடந்த பேட்டியில் 156.2 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசினார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி அணி 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் 162 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. டெல்லி அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணியால் 148 ஓட்டங்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

இந்த போட்டியில் டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே புயல் வேகத்தில் பந்து வீசினார். அவர் ஒரு பந்தை மணிக்கு 156.2 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 2012-ம் ஆண்டுக்குப்பின் அதிவேகத்தில் வீசப்பட்ட பந்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 4 சுற்றில் 33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 மட்டையிலக்கு வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

156.2 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசியது குறித்து அன்ரிச் நோர்ட்ஜே கூறுகையில் ‘‘போட்டி முடிந்த பின்னர்தான் நான் கேட்டு தெரிந்து கொண்டேன். அந்த நேரத்தில் எனக்குத் தெரியவில்லை. ஆனால் வேகமாக பந்தை வீசி நான் கடின பயிற்சி மேற்கொண்டேன்.

பந்தை வேகமாக வீசியதால் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையிலேயே நான் சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய் விரும்புகிறேன். இதுதான் முக்கியமன விசயம்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »