Press "Enter" to skip to content

நிதிஷ் ராணா அதிரடியால் டெல்லிக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 6 மட்டையிலக்கு இழப்புக்கு 194 ஓட்டங்கள் குவித்தது.

அபுதாபி:

ஐபிஎல் கிரிக்கெட்டின் 42 ஆவது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்த கில் 9 ஓட்டங்களில் நார்ட்ஜி பந்து வீச்சில் வெளியேறினார்.

அடுத்துவந்த ராகுல் திரிபாதியும் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நார்ட்ஜி பந்ஹ்டு வீச்சில் அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 3 ஓட்டத்தில் வெளியேற கொல்கத்தா அணி 7.2 சுற்றில் 42 ரன்களுக்கு 3 மட்டையிலக்குடுகளை இழந்து தடுமாறியது. 

அடுத்துவந்த சுனில் நரைன், ராணாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 பந்துகளை சந்தித்த நரைன் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 64 ஓட்டங்கள் குவித்து ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா 53 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 81 ஓட்டங்கள் குவித்து ஸ்டாய்னஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.

இறுதியில் 20 சுற்றுகள் முடிவில் 6 மட்டையிலக்குடுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 194 ரன்களை குவித்தது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் நார்ட்ஜி, ரபாடா, ஸ்டாய்னஸ் தலா 2 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினர். இதையடுத்து 195 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.   

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »