Press "Enter" to skip to content

பார்முலா1 தேர் பந்தயம் : ஷூமாக்கரின் சாதனையை தகர்த்தார், ஹாமில்டன்

பார்முலா1 தேர் பந்தய போட்டியில் அதிக வெற்றிகளை குவித்தவரான ஜெர்மனி முன்னாள் ஜாம்பவான் ஷூமாக்கரின் சாதனையை ஹாமில்டன் முறியடித்து புதிய சாதனை படைத்தார்.

போர்டிமாவ்:

இந்த ஆண்டுக்கான பார்முலா1 தேர் பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 12-வது சுற்றான போர்ச்சுக்கல் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள போர்டிமாவ் ஓடுதளத்தில் நடந்தது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்டு காரில் சீறிப் பாய்ந்தனர். 306.826 கிலோ மீட்டர் தூர இலக்கை 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 29 நிமிடம் 56.828 வினாடியில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.

இந்த பருவத்தில் அவர் பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். வாய்ப்பாடு 1 தேர் பந்தய வரலாற்றில் ஹாமில்டன் ருசித்த 92-வது வெற்றி இது. இதன் மூலம் இந்த போட்டியில் அதிக வெற்றிகளை குவித்தவரான ஜெர்மனி முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கரின் (91 வெற்றி) சாதனையை ஹாமில்டன் முறியடித்து புதிய சாதனை படைத்தார். நடப்பு தொடரில் ஹாமில்டன் 256 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ்) 179 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »