Press "Enter" to skip to content

பென் ஸ்டோக்ஸ் மனைவி குறித்து கொச்சையாக பேசிய சாமுவேல்ஸ்

கோரன்டைன் குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசிய நிலையில், பரம எதிரியாக நினைக்கும் சாமுவேல்ஸ் ஸ்டோக்ஸின் மனைவியை தரக்குறைவாக பேசியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவரது தந்தை நியூசிலாந்தில் உடல் நலம் குன்றியிருந்தார். இதனால் இங்கிலாந்தில் இருந்து அவசரமாக நியூசிலாந்து சென்றார் பென் ஸ்டோக்ஸ்.

கொரோனா காலம் என்பதால் நியூசிலாந்து அரசின் நடைமுறைப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன்பின் குடும்பத்துடன் இணைந்தார்.

அப்போது பென் ஸ்டோக்ஸ் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை வெளியிட்டியிருந்தார். இங்கிலாந்தை சேர்ந்த சிலர் இது எதுபோன்று என கேட்டு அனுப்பினர். அதற்கு பென் ஸ்டோக்ஸ் ‘‘இது நீங்கள் எப்போதும் செய்ய வேண்டிய மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் அல்ல என்று நான் சொல்லிக்கொண்டிருந்தேன், எனது மோசமான எதிரி கூட இந்த அனுபவத்தை அடைய நான் விரும்பமாட்டேன் எனக் கூறினேன்’’ எனத் தெரிவித்திருந்தார்.

அப்போது எனத சகோதரர் ‘‘மார்லன் சாமுவேல்ஸிடம் கூட செய்ய மாட்டீர்களா?’’ எனக் கேட்டார். அதற்கு பென் ஸ்டோக்ஸ் ‘‘இல்லை, இது மிகவும் மோசம், அது மிகவும் கடினமானது’’ எனத்  தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் சாமுவேல்ஸும் அடிக்கடி மைதானத்தில் மோதிக்கொள்வது வழக்கம். 2015-ல் வெஸ்ட் இண்டீஸில் நடந்த சோதனை கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் அவுட் ஆகி வெளியேறும்போது, மைதானத்தில் இருந்த சாமுவேல்ஸ் ஸ்டைலாக அவருக்கு ஒரு சல்யூட் அடித்தார்.

அப்போது ஆரம்பித்தது பிரச்னை. இருவரும் முறைத்துக் கொண்டார்கள். திட்டிக்கொண்டார்கள். பிறகு, டி20 உலகக் கோப்பை போட்டியின்போது கொல்கத்தா மைதானத்தில் தொடர்ந்தது இவர்களின் பிரச்சினை. இவர்கள் மோதலை ரசிகர்களும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் மீது ஏற்கனவே கோபத்தை காட்டும் சாமுவேல்ஸ் இந்த முறை அவரது மனைவியை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார்.

சாமுவேல்ஸ் தனது பதிலில் ‘‘எந்த ஒரு வெள்ளை பையனும் என்னை விளையாட்டில் வெளியேற்றி விட  முடியாது, என்னைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டாம். எவரும் என்னை திரும்பி பார்க்க நினைக்காத நிலையில், இந்த b*tch என்னை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறது. உன்னுடைய மனைவியை என்னுடன் 14 நாட்கள் அனுப்பி வைத்தால், 14 நொடிக்குள் ஜமைக்காவிற்கு திரும்பிவிடுவாள். என்னைப் பற்றி உங்கள் யாருக்கும் தெரியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வார்னே மற்றும் இங்கிலாந்தை சேர்ந்தவர்களையும் திட்டியுள்ளார். இதற்கு வாகன் கடுமையான வகையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »