Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஷேன் வாட்சன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷேன் வாட்சன் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் ஷேன் வாட்சன். சர்வதேச கிரிக்கெட், உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் டி20 லீக்குகளில் மட்டும் விளையாடி வந்தார்.

ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த பருவத்தில் வாட்சனின் சிறப்பான ஆட்டத்தால் இறுதிப் போட்டி வரை சிஎஸ்கே முன்னேறியது. இந்த பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. வாட்சனும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி லீக்கில் விளையாடிய பின்னர், சிஎஸ்கே வீரர்கள் அறையில், அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வுபெற இருப்பதாக உணர்ச்சிவசப்பட தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்சன் கடந்த 2016-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2018-ல் இருந்து சென்னை சூபபர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அந்த வருடம் சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கடந்த பருவத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக சதம் அடித்து இறுதிப் போட்டிக்கு அணியை முன்னேற வைத்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »